Friday, December 31, 2010

பிளாக்குகளை எவ்வாறு அழகாக்கலாம்


தற்போதைய நிலையில் பிளாக்குகள் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், கதை, கவிதை, கட்டுரைகள், சினிமா என தனது சொந்த கருத்துக்களை இடும் பயனாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் வளர்ந்து கொண்டே வந்து கொண்டிருக்கிறது.



பிளாக் எழுத என்று வருபவர்கள் தொழில்நுடபம் சார்ந்தவர்கள் என்று அல்லாமல் எழுத்துப் பணியில் உள்ளவர்கள் பெரும்பாலும் தங்கள் எழுத்துத் திறமையை பிளாக்கில் எழுதி காட்டுகிறார்கள். இவர்களால் எழுதப்படும் கட்டுரைகள், கருத்துக்கள் வியக்கத் தகும் வகையிலும், அரிய கருத்துக்களையும் தாங்கி வந்தாலும் அவர்களின் தொழில்நுட்ப அறியாமையினால் அவர்களது வலைப்பக்கங்கள் மிகச் சாதாரணமாகவும், சரியாக பண்படுத்ததல் இல்லாமலும் காணப்படுகின்றது.

இந்த கட்டுரை எளிய வகையில் தமது பிளாக்குகளை எவ்வாறு அழகாக்கலாம் என்பதை விவரிக்க உள்ளது. பிளாக்குகளை அழகாக்க தேவைப்படுபவைகளை, செயல்முறைகளையும் இங்கே காண்போம்.

1. டெம்ப்ளேட் என்னும் அடைப்பலகைகள்.

ஒவ்வொரு பிளாக்கிற்கும் உள்ள அழகே அதன் டெம்ப்ளேட்டுக்கள் தான். டெம்ப்ளேட்டுக்கள் தான் ஒருவரது பிளாக்கின் முதல் தோற்றத்தை தீர்மானிக்கிறது. அத்துடன் இடப்பட்டுள்ள கட்டுரைகளையும், சுட்டிகளையும் மிக அழகாக அடுக்கி வைப்பதற்கு டெம்ப்ளேட்டுகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. பிளாக்கர் நிறுவனம் பிளாக் உருவாக்கும் ஒவ்வொருக்கும் என தனது தளத்தில் சில டெம்ப்ளேட்டுகளை அளிக்கிறது. இவை முறையே Minima, Denim, Rounder, Herbert, Harbor, Scribe, Dots, thisaway என்பன உள்ளன. பிளாக் உருவாக்கும் ஒவ்வொருவரும் இவற்றில் எதாவது ஒன்றை தேர்வு செய்து விட்டு எழுத ஆரம்பிக்கின்றனர். ஆனால் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வேறொரு அழகான டெம்ப்ளேட்டை மாற்றிக் கொள்ளலாம் என்பதை பெரும்பாலோனோர் அறிந்திருப்பதில்லை. அவற்றை எங்கே காண்பது? எவ்வாறு மாற்றுவது என்பதை அறியலாம்.

இணையங்களில் கிடைக்கும் இலவச பிளாக்கர் டெம்ப்ளேட்டுக்களை தேட கூகிள் தளத்திற்குச் சென்று "Free Blogger Template downlod" எனத் தேடினால் எண்ணற்ற தளங்களின்
முகவரிகள் கிடைக்கும்

No comments:

Post a Comment