Friday, December 31, 2010

வலை உலகில் பணம் சம்பாதிப்பது எப்படி

வலைப்பதிவில் பணம் சம்பாதிப்பது எப்படி ?!

  
வலை உலகில் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். ஏனெனில் வலை உலகம் என்பது பல கோடிக்கணக்கான மக்கள் இணைந்திருக்கும் மிகப்பெரிய பிரம்மாண்டமான வலை உலகம். உங்களுக்கு தெரிந்த விபரங்களை, தகவல்களை, செய்திகளை இணைய தளம் கொண்டு உருவாக்கி, அவைகளை இணைய உலகில் தவள விட்டால் அவை எவ்வாறு அல்லது எத்தனை மக்களைச் சென்றடைகின்றன என்பதைப் பொறுத்து உங்களுக்கு இலாபம் கிடைக்கும்.

உதாரணமாக விகடன்.காம் தளம் தனது இதழ் பிரதிகளை இணையத்தில் இட்டு ஆண்டுச் சந்தா மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்டுள்ளது. பாரத்மேட்ரிமோனி.காம் என்னும் திருமண தகவல் தளம் கோடிக்கணக்கான இலவச உறுப்பினர்களைக் கொண்டும் அதில் இலட்சங்களில் பணம் செலுத்தும் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. நவ்க்ரி, மான்ஸ்டர் போன்ற வேலை வாய்ப்பு தளங்களும் கோடிக்கணக்கான இலவச வேலை தேடுவோரின் தகவல்களைக் கொண்டு அவற்றை நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டாளர்களுக்கு ஆண்டுக்கு இவ்வளவு என பணம் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறது.

ஆக, இணைய தளங்கள் மக்களுக்கு தேவையான சேவைகளை அளித்து அதற்கென கட்டணங்களை நிறுவி அல்லது இடப்படும் விளம்பரங்களை வைத்து பணம் சம்பாதித்துக் கொண்டு இருக்கின்றன. இவற்றில் நாம் பார்க்கப் போவது வலைப்பதிவில் அதாவது இலவசமாக நமக்குக் கிடைக்கும் இவைகளில் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதைப் பார்க்கப் போகிறோம்.

முதலாவதாக பணம் சம்பாதிப்பது என முடிவெடுத்தவுடன் எந்தவித உழைப்புமில்லாமல் பணம் சம்பாதிக்க முடியாது என்பதை உணர வேண்டும். மேலும் வலைப்பதிவுகளில் பணம் சம்பாதிப்பது என்பது உங்களது தகவல்களை எவ்வாறு பயன்படப்போகின்றன, எத்தனை பேரின் கவனங்களை ஈர்க்கிறது, எத்தனை பேர் உங்களின் தளத்திற்கு வருகை தருகிறார்கள் எனபதைப் பொறுத்து உள்ளது. அவற்றிற்கு ஏற்ப உங்கள் தளங்களில் விளம்பரங்கள் இட்டு பணம் பார்க்கலாம். உங்களின் வலைத்தளத்தில் இடப்படும் தகவல்கல் பிற தளங்களில் இருந்து பிரதி எடுத்து இடப்படுபவையாக இருத்தல் கூடாது. ஏனெனில் இணையத்தில் தேடுபொறிகளில் தேடப்படும் பொழுது ஏற்கனவே இடப்பட்டுள்ள தளங்களுக்குச் சென்று விடுவதால் உங்கள் தளம் ஏற்கப்பட மாட்டாது. அடுத்து நீங்கள் எந்த வகையாக தகவல்களை, சேவைகளை அளிக்கப் போகிறீர்கள் என்பதை கவனத்தில் கொண்டு இருக்க வேண்டும்.

வலைப்பதிவு உருவாக்கம் செய்தாகி விட்டது. வலைப்பதிவில் பதிவுகள் ஏற்றப்பட்டாகி விட்டது. தளத்திற்கு வருகையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது. தற்போது எந்த எண்ணிக்கையை எவ்வாறு பணம் சம்பாதிப்பதில் திருப்பது என்று பார்க்க வேண்டும். இணைய தளங்களுக்கான விளம்பர வருமானங்களில் முதன்மையாக உள்ளது கூகிளின் ஆட்சென்ஸ் (AdSense) எனப்படுவது தான். அதனை எவ்வாறு எனபதனைக் காண்போம்.


விகடன்.காம் இணையதளத்தின் ஆட்சென்ஸ் இடப்பட்டுள்ள பகுதி


கூகிள் ஆட்சென்ஸ் மூலம் உங்களின் தள விபரங்கள் போன்றவற்றைக் கொடுத்து உங்களுக்கென கணக்கு உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஆட்சென்ஸ் கணக்கு என்பது ஜீமெயில் போன்ற சாதாரண கணக்கு அல்ல, இக்கணக்கு உருவாக்கும் செயல்முறைகள் முடிந்தவுடன், கூகிள் பணியாளர்கள் உங்களது விபரங்களை ஆய்வு செய்து, தளம் சரியானதாக உள்ளதா?, வருகையாளர்கள் கணிசமாக உள்ளனரா, உங்கள் தளத்தில் பயன்படுத்தப்படும் மொழி தாம் நிறுவிய விதிகளுக்குட்பட்டு உள்ளதா என்பன போன்ற விபரங்களை ஆய்வு செய்து அனுமதி கொடுப்பார்கள். அவ்வாறு அனுமதிக்கப்பட்ட பின் ஆட்சென்ஸ் கணக்கில் உட்புகுந்து விளம்பரங்களுக்கான உயர, அகல அளவுகளை நிறுவி கிடைக்கும் நிரலை உங்களின் வலைத்தில் இடது, வலது, கீழ், மேல் என எந்த இடங்களிலும் பொருத்திக் கொள்ளலாம்.

கூகிள் ஆட்சென்ஸ் முகப்புப் பக்கம் - http://www.google.com/adsense


வலைப்பதிவுக்கு வருகை புரிவோர்கள் கண்களில் படும் இவ்வகை விளம்ப்ரங்கள் அவர்கள் விளம்பரங்களைச் சொடுக்கும் பொழுது உங்களுக்கு பணம் உங்கள் கணக்கில் சேர்க்கப்படும். ஆக எத்தனை பேர் வருகிறார்கள் என்பதைப் பொறுத்தும், அவர்கள் விளம்பரங்களைச் சொடுக்குவதைப் பொறுத்தும் உங்கள் வருமானம் உள்ளது.



விளம்பரங்கள் சொடுக்கப்படுவது பற்றிய அனைத்து விபரங்களையும் உங்களால கவனிக்கவும் முடியும். தினமும் சொடுக்கிய விபரங்கள், வார அறிக்கை, மாத அறிக்கை என அறிக்கைகளை ஆய்வு செய்ய முடியும். உங்களுக்கு கிடைக்கும் அறிக்கையைப் போல் கூகிளிக்கும் உங்களால் எத்தனை இடங்களிலிருந்து விளம்பரங்கள் கிடைக்கிறது, விளம்பரங்கள் தவறாக நிறுவிய நபர்களால் சொடுக்கப்படுக்கிறதா, திரும்ப திரும்ப ஒரு சில இடங்களிடமிருந்து சொடுக்க்பபடுகிறதா என தெளிவாக கண்காணிக்கப்படும்.

ஆகையினால் உங்கள் விளம்பரங்களை தவறாக பயன்படுத்துதல் கூடாது. அவற்றை கூகிள் கண்டுபிடித்தால் மொத்தமாக கணக்கை செயலிழக்கம் செய்து விடுவார்கள். ஆட்சென்ஸ் பற்றிய மேலதிக தகவல்களையும், இன்னபிறவற்றையும் அடுத்த பகுதியில் காண்போம். உங்களுக்கு ஏற்படும் ஐயங்களை பின்னூட்டமாகத் தெரிவிக்கவும்

1 comment:

  1. Classiindia - free online Classified Website , Buy & Sell , Real Estate , Jobs, Educations , Services, Pets, Electronics , More Services Visit - www.classiindia.com

    ReplyDelete