Wednesday, January 12, 2011

திருடு போன கைப்பேசியைக் கண்டுபிடிக்க வழி

ப: வழி இருக்கிறது. ஆனால், நோக்கியா கைப்பேசிகளில் மட்டுமே செயல் படும். கீழே கொடுக்கப் பட்டு இருக்கும் இணையத் தளத்திற்குப் போய் ஒரு நிரலியைப் பதிவி இறக்கம் செய்து கொள்ளுங்கள்.
http://www.ziddu.com/download/5424188/Nokia_Antitheft.zip.html
பின்னர் உங்கள் கைப் பேசியில் பதிப்பு செய்து கொள்ளுங்கள். அதன் பின்னர் உங்கள் நோக்கியா கைப்பேசி திருடு போனதாக வைத்துக் கொள்வோம்.

திருடியவர் என்ன செய்வார். கைப்பேசியை முதலில் அடைத்து விடுவார். பின்னர் அவருடைய 'சிம்' அட்டையை உங்கள் கைப்பேசிக்குள் போட்டு சந்தோஷப் படுவார். இனிமேல் யாராலும் கண்டு பிடிக்க முடியாது என்று நினைத்துக் கொண்டு திருடி வந்த கைப்பேசியை முடுக்கி விடுவார். கைப்பேசியைத் தொடக்கியதும் 'இந்தக் கைப்பேசி உங்களுக்குச் சொந்தமானது இல்லை. தயவு செய்து அருகாமையில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கவும்' என்று அறிவிப்பு வரும். அப்புறம் சும்மா இருக்காது. சத்தம் போடும். 'பீப் பீப்' என்று எரிச்சலான சத்தத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். உங்களுக்கும் ஒரு செய்தி அனுப்பும். பெரிய தலைவலியைக் கொடுக்கும்.

No comments:

Post a Comment